எதிர்எதிர் துருவங்கள் திடீர் சந்திப்பு.. திருமாவளவனின் முதுகில் தட்டிக்கொடுத்து கைக்குலுக்கிய அண்ணாமலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 5:11 pm

எதிர்எதிர் துருவங்கள் திடீர் சந்திப்பு.. திருமாவளவனின் முதுகி தட்டிக்கொடுத்து கைக்குலுக்கிய அண்ணாமலை!!!

பாஜகவை எப்போது விமர்சிப்பவர் விசிக தலைவர் திருமாவளவன். பாஜக, பாமக உள்ள கூட்டணியில் என்றும் விசிக இருக்காது என அடிக்கடி சொல்லிக் கொள்ளும் திருமாவளவன் இன்று அண்ணாமலையை எதேச்சயைக சந்தித்துள்ளார்.

இன்று செங்கலப்ட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து கொண்டனர். அரசியலில் எதிரெதிர் துருவங்களான இவர்கள் அனைவரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

அதாவது அண்மையில் மறைந்த பங்காரு அடிகளார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க இன்று தருமாவளவன் மேல்மருவத்தூர் சென்றார். அங்கு பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவரது மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன் பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அண்ணாமலை, எல் முருகன் ஆகியோர் பங்காரு அடிகளார் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்தனர். இந்த வேளையில் திருமாவளவன்-அண்ணாமலை, எல் முருகன் ஆகியோர் எதிர்பாராத விதமாக சந்தித்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் பாஜகவின் கேசவ விநாயகம் தனியே காரில் வந்த நிலையில் அவரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு என்பது எதார்த்தமாக நடந்த ஒன்றாகும்.

பொதுவாக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டாலும் கூட பொது இடத்தில் சந்தித்து கொள்ளும்போது தலைவர்கள் பேசி கொள்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் தான் இன்று அண்ணாமலை, எல் முருகன் ஆகியோருடன் திருமாவளவன் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பாஜகவின் கொள்கைள், சனாதன தர்மத்தை மேடைகள் தோறும் விமர்சனம் செய்து வருகிறார். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் கூட்டணியில் உள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்