மீண்டும் எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை : சபாநாயகருடன் சந்திக்கும் இபிஎஸ்.. பரபரப்பில் அதிமுக!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2023, 7:22 pm

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை மீண்டும் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள்(அதிமுக எம்.எல்.ஏக்கள்) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. வருகிற 13ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது.

இந்த கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்களின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மூத்த எம்.எல்.ஏக்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் எவ்வாறு முறையிட வேண்டும் என்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்து இந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை மீண்டும் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.

நாளை காலை 9.15 மணியளவில் வேலுமணி உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!