ஆர்எஸ்எஸ் தலைவருக்கு எதிர்ப்பு.. போலீஸ் கன்னத்தில் ‘பளார்’ விட்ட மதுரை நந்தினி… கோவையில் களேபரம்!!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2023, 8:06 pm
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 10ம் தேதி முதல் ஒரு வாரம் தேசிய நிர்வாகிகள் மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கடந்த ஓண்டில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் சாதனைகள், பிரச்சனைகள் குறத்து விவாதிக்க உள்ளனர். மேலும் கடந்த ஓராண்ட செயல் திட்டம் குறித்தும் முடிவு செய்யப்பட உள்ளது.
ஆர்எஸ்எஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் உதகையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையை சேர்ந்த நந்தினி, நிரஞ்சனா ஆகிய இரு பெண்கள் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.
மேலும் அதற்காக மதுரையிலிருந்து பேருந்து மூலம் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட சென்ற இரண்டு பெண்களையும் சூலூர் போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முற்பட்டனர்.
அப்போது அப்பெண்கள் ஆனந்தி என்ற பெண் காவலரை கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.