சபரீசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு.. இபிஎஸ் சொன்னது உண்மையா? பரபரக்கும் தமிழக அரசியில் களம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 9:14 pm

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. நடப்பு தொடரில் இரு அணிகளும் முன்னதாக மோதிய முதல் போட்டியில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை அணி வீழ்த்தியிருந்தது. சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை அணி.

இந்த போட்டியை காண பிரபலங்கள் குவிந்தனர். இந்த போட்டியை காண அனிருத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், தனுஷ், லோகேஷ் கனகராஜ், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி போன்றோர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.

அவர் விளையாட்டின் போது, கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓபிஎஸ், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியுள்ளார். சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்து வரும் நிலையில், இந்த புகைப்படங்கள் அதிமுக மற்றும் ஓபிஸ் தரப்பிடையே மீண்டும் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ