மகனுக்கு கல்தா? தாமரை சின்னத்தில் எம்பி பதவிக்கு போட்டி போடும் ஓபிஎஸ் : பாஜகவின் மெகா கணக்கு!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2024, 8:21 pm
மகனுக்கு கல்தா? தாமரை சின்னத்தில் எம்பி பதவிக்கு போட்டி போடும் ஓபிஎஸ் : பாஜகவின் மெகா கணக்கு!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சட்டப்போராட்டத்தை நடத்தி வரும் நிலையல், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்துள்ளது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால் அதிமுக என்றால் நாங்கள்தான், அதிமுக சின்னம் எங்களுக்குத்தான் என்று இன்னும் கூக்குரலிட்டு வரும் ஓபிஎஸ், பாஜகவுடன் இணைந்து செயலாற்றி வருகிறார்.
அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்ததில் இருந்து, ஓபிஎஸ் பாஜக உடனான நட்புறவில் இருந்து வருகிறார். பிரதமர் மோடிதான் மீண்டும் ஜெயிப்பார் என கூறி வருகிறார்.
பாஜகவோ டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றம் அதிமுகவுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், அதிமுக நழுவிச் சென்றது. இந்த நிலையில் தான், பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓபிஎஸ்க்கு பாஜக வேறு ஒரு யோசனையை கூறியுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால் களம் நன்றாக இருக்கும் எனக் கருதும் பாஜக மேலிடம் அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளது.
சட்டசபையிலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிபோனதோடு மட்டுமல்லாமல் பின் இருக்கை ஒதுக்கப்பட்டு ஓரமாக உட்கார வேண்டிய சூழல் வந்துள்ளது.
இதனால் இனியும் சட்டசபை செல்வதா என்ற மனநிலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது தரப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் கையில் அதிகாரப் பதவி இருக்க வேண்டும் என எண்ணுவதாகவும் இதையறிந்து தான் பாஜக அவரை தாமரைச் சின்னத்தில் களமிறக்க காய் நகர்த்துவதாகவும் தெரிகிறது.
அப்போ ஓ.பி.ரவீந்திரநாத் நிலைமை என்னவாகும் என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே விடை தெரியாமல் குழம்பிப் போய் காணப்படுகிறார்கள்.