பதவிக்கு ஆசையில்லைனு சொல்லி அரசியல் நாடகம் நடத்துவதே ஓபிஎஸ் வேலை : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!

ஓ.பி.எஸ் நிராயுதபாணியாக நிற்பதால் தான் தலைமை மீது ஆசையில்லை என சொல்லி அரசியல் நாடகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார், அது தொண்டர்களிடம் எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை கே.கே.நகரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர், “சுயநலம் கொண்ட நபர்களிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றியவர் எடப்பாடி தான். எனவே, 99% கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கிறார்கள்.

தொண்டர்கள் என்னிடம் உள்ளனர் என்று எதுவுமே புரியாத நபரை போல வாய்ப்பாடு பாடிக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். பொதுக்குழுவவில் பங்கேற்க முடியாததற்கு காரணம் போக்குவரத்து நெரிசல் என குழந்தை தனமான பதிலை சொல்கிறார். எனவே, அவர் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு உண்டான தகுதியை இழந்து விட்டார்.

அதிமுக யாருடைய அப்பா வீட்டு சொத்து என கேட்கிறார் ஓ.பி.எஸ். அவர் ஏன் அவருடைய சொந்த வீட்டில் திருடினார்? ஓ.பி.எஸ் நிராயுதபாணியாக நிற்பதால் தான் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார். தலைமை மேல் ஆசை இல்லை என்று அவர் சொல்வதெல்லாம் அரசியல் நாடகம் தான். அது தொண்டர்களிடம் எடுபடாது. அவருடைய இறுதி அத்தியாயத்தின் திருவிளையாடல் தான் தற்போதை நடவடிக்கைகள் எல்லாம்.

சாமானிய தொண்டனாக இருந்து எம்.எல்.ஏ. ஆனவர் உசிலம்பட்டி ஐயப்பன். திருவிழாவில் மிட்டாயை காட்டி சிலர் குழந்தைகளை அழைத்து சென்று விடுவர். அப்படித்தான் தவறான வழியில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவளித்துள்ளார்” என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

13 minutes ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

1 hour ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

2 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

3 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

3 hours ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

4 hours ago

This website uses cookies.