வரும் 14ம் தேதி அனைத்து மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு: அரசின் திடீர் அறிவிப்பு..!!

Author: Rajesh
11 April 2022, 3:51 pm

மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்.14ல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள், சாராயக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 14ம் தேதி மஹாவீர் ஜெயந்தியையொட்டி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு, கலால் துறை ஆணையர் முக்கிய ஆணையிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது,

புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம், பார், உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வியாழக்கிழமை அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகளை மூடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!