கைவிரித்த கூட்டணி… யாத்திரையை முடிக்க சொல்லி அண்ணாமலைக்கு மேலிடம் போட்ட ஆர்டர் : அப்செட்டில் டெல்லி பாஜக!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2024, 11:59 am
கைவிரித்த கூட்டணி… யாத்திரையை முடிக்க சொல்லி அண்ணாமலை மேலிடம் போட்ட ஆர்டர் : அப்செட்டில் டெல்லி பாஜக!
2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 18ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள். கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதிமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக செல்வதால்.. பாஜக கூட்டணிக்கு ஆள் வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம். தமிழ்நாட்டில் கூட்டணி அமையாத காரணத்தால்.. டெல்லியில் நட்டா, அமித் ஷாவும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.