பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும்.. வைத்திலிங்கத்திற்கு ஓ.எஸ். மணியன் பதிலடி..!!

Author: Babu Lakshmanan
15 July 2022, 9:39 pm

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த வைத்திலிங்கம் பேச்சுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஓஎஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினராக ஓஎஸ் மணியனை அமைப்பு செயலாளராக அறிவித்துள்ளார். அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎஸ்.மணியன் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார்.

அங்கு ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்ததை தொடர்ந்து, அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, அதிமுக அமைப்பு செயலாளர் ஓஎஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த வைத்திலிங்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓஎஸ்.மணியன், பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போல உள்ளது வைத்திலிங்கம் என்று விமர்சனம் செய்தார்.

ஒபிஎஸ் 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓஎஸ்.மணியன், அதிமுகவின் சட்ட விதிகளின்படி வளர்ச்சி பாதைக்கு எடப்பாடி பழனிச்சாமி கொண்டு செல்கிறார். அவர் கூட்டிய பொதுக்குழு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் தடம் மாறாதவர்கள். 1973 முதல் அதிமுக என்றுமே வளர்ச்சிப்பாதையில்தான் செல்கிறது என்று கூறினார்.

இதனிடையே நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், ஓஎஸ்.மணியன் ஆகியோர் புகைப்படங்களில் ஒ.பன்னீர்செல்வம் புகைப்படம் அகற்றப்பட்டு இருந்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 717

    0

    0