வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர் ஓபிஎஸ் : ஓ.எஸ். மணியம் கடும் தாக்கு!!

Author: Babu Lakshmanan
24 January 2023, 9:36 am

வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர் ஓபிஎஸ் என திருப்பூண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கழக நிறுவனத் தலைவரும் பாரத ரத்னா எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு பொது கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டி கடைவீதியில் அதிமுக முன்னாள் அமைச்சரின் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு எம்ஜிஆர் கொண்டு வந்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

மேலும், அதிமுக 4 அணி என்பதை இல்லை எனவும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆளாக செயல்படுவதாகவும் கூறினார். அதிமுகவில் 2,642 பொதுகுழு உறுப்பினர்கள் உள்ளதாகவும், ஓபிஎஸ் அணியில் எண்ணிப் பார்த்தால் நூறு பொதுக்குழு உறுப்பினர்கள் கூட இல்லை எனவும், 99.5% எடப்பாடியார் அணியில் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர் எனவும், எச்சில் கையில் காக்கை விரட்ட மாட்டார் எனவும் இந்த பழமொழிக்கு பொருத்தமானவர் ஓ. பன்னீர்செல்வம் என குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி மற்றும் கழக பேச்சாளர்கள் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • Vetrimaaran Viduthalai controversy A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!
  • Views: - 584

    0

    0