32 வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்த எங்கள் பிள்ளை : பேரறிவாளன் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்…!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 3:05 pm

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார் பேரறிவாளன்.

Image

இதே போல கொளத்தூர் மணி, உதயநிதி ஸ்டாலின், கோவையில் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் ஆறுச்சாமி உள்ளிட்டோரை பேரறிவாளன் சந்தித்தார்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இல்லத்திற்கு சென்ற பேரறிவாளன் நலம் விசாரித்தார்.

Image

இது தொடர்பாக சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், இன்று எங்கள் இல்லத்திற்கு 32 வருடங்களுக்கு பின்னர் வந்த எங்கள் மூத்த பிள்ளை என பதிவிட்டுள்ளார்.

1977ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், பின்னர் திமுகவில் இணைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசில் அமைச்சராகவும் பின்னர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்.

Image

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியதாக தடா சட்டத்தின் கீழ் கணவருடன் 1992-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 11 மாதம் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறை தண்டனை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…