எங்க உயிருக்கு ஆபத்து.. துப்பாக்கியை கொடுங்க : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வந்த பரபரப்பு கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 8:16 pm

கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய விஏஓ., தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக சக விஏஓ கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக விஏஓ கூறியும் ஆட்சியர் அலட்சியம் காட்டியதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்தது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு விஏஓ.,மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இதனால் வி.ஏ.ஓ., க்களுக்கு மிரட்டல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு, வி.ஏ.ஓ., சங்கம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, வி.ஏ.ஓ., க்களுக்கு தற்காப்பு பயிற்சி அளித்து கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்.

நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. வி.ஏ.ஓ.,கள் அளிக்கும் புகார் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 388

    0

    0