கஞ்சா விற்பதில் போட்டி…காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை: அதிகரிக்கும் கஞ்சா புழக்கத்தால் சீர்கெட்டு திரியும் இளைஞர்கள்!!

Author: Rajesh
1 April 2022, 11:57 am

ஸ்ரீ பெரும்புதூர்: கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே மணிமங்கலம் கிராமம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பஞ்சாட்சரம். கூலி தொழிலாளியான இவரது மகன் தேவேந்திரன். அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைப்பது மற்றும் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், இரவு நேரங்களில் பணம், செல்போன் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முந்தினம் தேவேந்திரன் வீட்டுக்கு வராததால் அவரது தந்தை, மணிமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேவேந்திரனை தேடி வந்தனர்.

போலீசாரின் தேடுதல் பணியின் போது, மணிமங்கலம் காவல் நிலையம் அருகே புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் மேல் தளத்தில், தேவேந்திரன் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தேவேந்திரன் கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்து மணிமங்கலம் பகுதியில் விற்பனை செய்துள்ளார். அதில், ஏற்பட்ட தொழில் போட்டியில் அவரது நண்பர்களே அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Crime Data: Patna Reports Highest Murder And Theft Cases In Jan-Mar  2021

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மணிமங்கலம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள படப்பை, ஒரத்தூர், கரசங்கால், காவனூர், திருத்தவெளி, மணிமங்கலம், செரப்பணஞ்சேரி, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடக்கிறது. இதனை போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1508

    0

    0