இரவோடு இரவாக ஆதரவாளர்களுடன் பயணம் : டெல்லிக்கு புறப்படும் முன் காரணத்தை கூறிய ஓ.பன்னீர்செல்வம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 9:12 pm

அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியினர் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் டெல்லி புறப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதில், மனோஜ் பாண்டியன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டெல்லி செல்வது உறுதியாகி உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சொல்கிறாரா என்பது உறுதியாகவில்லை என்றும் ஆனால், வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் இரு அணிகளாக பிரிந்து, சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி விரைகிறார்கள் என கூறப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்கிறேன், பாஜக அழைப்பு விடுத்ததன் பேரில் செல்ல உள்ளதாக டெல்லி செல்லும் முன் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 537

    0

    0