திமுகவிற்கு இனி ஆதரவு இல்லை; தலித் மக்களை வஞ்சிக்கிறது திமுக; திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்

Author: Sudha
19 July 2024, 9:38 am

தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் தொடருகின்றன. திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் என கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாஜகவின் ‘கஞ்சா’ அஞ்சலைக்கும் போலீசார் வலைவிரித்துள்ளனர்.

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் பின்பற்றுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும் என தெரிவித்திருந்தார்.

சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?மாநில தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா? என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில் சென்ற தேர்தலில் தி மு க விற்கு வாக்களித்தேன்.மாற்றம் வரும் என நினைத்துதான் திமுகவிற்கு வாக்களித்தேன். ஆனால் திமுக அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலித்துகளின் நிலையில் மாற்றம் இல்லை.ஆம்ஸ்ட்ராங் நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டேன்.இது ஒரு எச்சரிக்கை என பதிவிட்டுள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 227

    0

    0