நந்தி சிலை மீது ஏறிய பா.ரஞ்சித்…ஒரே ஒரு வீடியோ : சென்னை கமிஷ்னரிடம் போன புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2024, 1:28 pm

இயக்குநர் பா ரஞ்சித்துக்கு எதிராக நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை கொடுத்தது பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் தான். அவர்கள் வழங்கிய புகாரில், ‛‛இயக்குநர் பா ரஞ்சித் தனியார் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், ‛‛நான் படித்த பள்ளியின் எதிரே ஒரு நந்தி இருக்கும். அந்த கல் மீது ஏறினால் வானத்தை நோக்கி பறந்து விடலாம் என கூறுவர். அதன்மேல் ஏறி நின்று வானத்தில் பறக்கிறேனா, இல்லையா என்று முயற்சி செய்தேன்
புத்தகம் மீறி ஏறி நின்றால் படிப்பு வராது என்று கூறுவார்கள். நான் வேண்டுமென்று ஏறி உட்கார்ந்து பார்ப்பேன். சின்ன வயதில் அதையெல்லாம் செய்திருக்கிறேன்.

பா ரஞ்சித்தின் இந்த பேச்சு என்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. நந்தி வடிவில் உள்ள ஈசனை வணங்கும் பக்தர்களை இழிவுப்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார்.

படிப்புக்கு தாயாக விளங்கும் சரஸ்வதி தேவியை புண்படுத்தி உள்ளார். ஏனென்றால் ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் புத்தகங்களை வைத்து மக்கள் வணங்குகின்றனர். இதனால் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட யூடியூப்பில் இருந்து ரஞ்சித் பேசிய வீடியோவை நீக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புகார் அளித்தவர்கள் கூறுகையில், இயக்குநர் பா ரஞ்சித் மீது பாரத் ஹிந்து முன்னணி சார்பில் புகார் அளிக்க வந்தோம். தொடர்ச்சியாக பா ரஞ்சித் இந்து மக்கள், இந்து மதத்தின் மீதான நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் தவறுதலாக பேசி வருகிறார். ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிறு வயதில் புற்று மீதும், நந்தி மீது ஏறி நின்றதாக கூறுகிறார்.

இதுபோன்று அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அவரும், அவரை சார்ந்தவர்களும் இந்து மக்களை இழிவுப்படுத்துவதை ஒரு வேலையைாகவே வைத்துள்ளனர். அதனால் அவர் மீது புகார் அளித்துள்ளோம்.

ஏற்கனவே விடுதலை சிகப்பி கடவுள் ராமர் பற்றி சர்சையாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் போய் கொண்டிருக்கிறது. அதேபோல் இவரும், இவரை சார்ந்தவர்களும் இதனை பற்றியே பேசி வருகிறார். இதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி