விஜயகாந்திற்கு பத்மவிபூசன் விருது… விருதை வாங்கிய பிறகு ஒரு நிமிடம் கண்களை மூடி பிரேமலதா செய்த செயல்!

Author: Babu Lakshmanan
9 May 2024, 8:12 pm

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று வரையிலும் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம விபூசன் விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்த விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்ற போது, ஒரு நிமிடம் கண்களை மூடி மேல்நோக்கி பார்த்தவாறு விருதை விஜயகாந்திற்கு சமர்ப்பணம் செய்தார்.

  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!