விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது வேதனை.. சுற்றுலா ரயில் தீ விபத்து : ஆளுநர் ஆர்என் ரவி இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 10:47 am

மதுரை அருகே சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இந்த நிலையில் ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

ரெயில் தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன” என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 336

    1

    0