விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 14 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு ; சிறந்த காளையாக ராக்கெட் சின்னகருப்பு தேர்வு

Author: Babu Lakshmanan
16 January 2024, 6:13 pm

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டது.

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் நடைபெற்றது. காலை 7 மணியளவில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதன் பிறகு பாலமேட்டிலுள்ள பல்வேறு கோவில்களின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது-

10 சுற்றுகளாக மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இதில், 14 காளைகளை அடக்கிய பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்தார். இவர் 2020, 21மற்றும் 22ம் ஆண்டுகளில் முதல் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி 2வது பரிசும், 8 காளைகளை அடக்கிய பாண்டீஸ்வரன் 3வது இடத்தையும் பிடித்தனர். சிறந்த காளையாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராக்கெட் சின்னகருப்பு தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கும் அரசின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மொத்தம் 42 பேர் காயமடைந்தனர்.

  • Nithya Menon Kisses Director Mysskin தயவு செஞ்சு தொடாதீங்க.. இயக்குநருக்கு முத்தம் கொடுத்த நடிகை : வெளியான பரபரப்பு வீடியோ!
  • Views: - 302

    0

    0