பழனி மலைக்கோவிலில் மாற்று மதத்தினை சேர்ந்த நபர்கள் உள்ளே வரக்கூடாது என மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த சட்டமானது இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பழனி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் சென்னையில் இருந்து வந்த தனது உறவினர்கள் சிலரை பழனி மலைக்கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக அடிவாரத்தில் உள்ள மின்இழுவை ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, டிக்கெட் கவுண்டர் அருகே சென்றபோது, மாற்று மதத்தினர் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பழனியை சேர்ந்த பழக்கடை உரிமையாளர் சாகுல் அதிகாரிகளுடனும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து இந்துமுன்னனி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மின்இழுவை ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசி மலைக்கோவிலுக்கு செல்ல முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அடிவாரம் போலீசார் இந்து அமைப்பினரை சமாதானம் செய்தனர். மேலும் மலைக்கோவிலுக்கு செல்ல வந்த மாற்றுமதத்தினரை சேர்ந்தவர்களை கோவிலுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, சாகுலுடன் வந்தவர்கள் காரில் ஏறி சென்றனர். கும்பாபிசேகத்திற்கு முன் வரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற பதாகை இருந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அந்தப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த பிரச்சனை காரணமாக மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று மதத்தினர் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பழனிகோவிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பு கருதி மின்இழுவை ரயில், ரோப்கார் மற்றும் படிவழிப்பாதையில் பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் என்றும், இந்து அல்லாதோர் மற்றும் மாற்றுமதத்தினர் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை உடனடியாக திருக்கோவில் நிர்வாகம் வைக்க வேண்டும் என்றும், கோரிக்கை வைத்த நிலையில் மீண்டும் பதாகைகள் வைக்கபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பழனி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதோர் செல்ல தடை எனக் கூறி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை பெரும் சர்ச்சையானதால் அகற்றப்பட்ட சூழலில், தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.