திருப்பூர் அருகே செய்தியாளரை அரிவாளால் வெட்டி சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப் பிரபு, வழக்கம் போல செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். நேற்றிரவு அவரது வீட்டை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள், நேசபிரபுவை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது..
இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் பிரவீன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
This website uses cookies.