பரந்தூரை தேர்வு செய்ததே அவங்கதான்… பிரச்சனைகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பு : மத்திய அமைச்சர் வி.கே.சிங்

Author: Babu Lakshmanan
27 January 2023, 6:04 pm

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என்றும், மாநில அரசு தான் தேர்வு செய்தது என்று மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் விகே சிங் நெல்லை வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- கேந்திர வித்யாலயா பள்ளிகள் துவங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இடத்தை தேர்வு செய்து தந்தால், அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் விமான நிலையத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெறும். சேலம் – சென்னை எட்டு வழிச்சாலையில் பசுமை வழிச்சாலையாக மாற்றும் செய்து திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. அதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை.

மக்களின் போராட்டம் குறித்து மாநில அரசை முடிவு செய்து கொள்ள வேண்டும். நாகர்கோவில் – திருவனந்தபுரம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்த பின்பு பணிகள் மீண்டும் தொடரும், என தெரிவித்தார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…