பள்ளி விளையாட்டு விழா; மழையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்; கோவை தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் புகார்!..

Author: Sudha
20 July 2024, 8:34 am

மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனியில் லிசிக்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியின் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது.

பள்ளி விளையாட்டு விழாவின் போது மழையும் இருந்துள்ளது. பள்ளி நிர்வாகம் அதைப்பற்றி கவலைப்படாமல் மாணவர்களை மழையிலேயே அமர வைத்து பள்ளி விளையாட்டு விழாவை பார்க்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

விளையாட்டு விழா நடத்தப்பட்ட மேடைக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் அதிருப்தி அடைந்து பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளனர்.

மாணவர்கள் மழையில் அமர வைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!