எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம்.. காதல் கணவனுடன் வாழ்ந்த மகளை கடத்தி மொட்டையடித்த பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 7:35 pm

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, கணவன் வீட்டில் இருந்து கடத்திச்சென்று அவரது தலையில் மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவ் . இவர் பக்கத்து ஊரை சேர்ந்த அட்சிதா என்ற பெண்ணை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர். மகள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அச்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரண்டு கார்களில் உறவினர்களுடன் காதல் தம்பதி வசித்த வீட்டிற்கு சென்ற அச்சிதாவின் பெற்றோர் அவர்களை கடுமையாக மிரட்டியதோடு தங்கள் மகள் அச்சிதாவை மட்டும் காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது.

வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அச்சிதாவுக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து குடிக்க செய்து, அவரை அலங்கோலப்படுத்துவதாக நினைத்து தலைமுடியையும் மொட்டை அடித்துள்ளனர்.

பின்னர் அவமானப்படுத்தி கணவன் வீட்டிற்கு விரட்டி விட்டதாக அச்சிதா போலீசில் புகார் அளித்துள்ளார். அச்சிதா அளித்துள்ள புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இளம் பெண்ணை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியதாக, அவருடைய பெற்றோர் மற்றும் தாய்மாமன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 465

    0

    0