பாரீஸில் கோலாகலமாக தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள்; சாதிக்கத் துடிக்கும் இந்திய வீரர்கள்; இரட்டை இலக்கத்தில் பதக்கம்,..

Author: Sudha
26 July 2024, 8:50 am

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். இந்த போட்டி பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது. அதாவது ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த போட்டியில்தான் ஆண் வீரர்களும், பெண் வீராங்கனைகளும் சம அளவில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 10,500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர்.

கடந்த ஆண்டுகளில் நடை பெற்ற போட்டிகளில் தனி நகரமே உருவாக்கி, புதிதாக மைதானங்கள் கட்டப்பட்டது.ஆனால், இந்த முறை பாரிசில் ஏற்கனவே உள்ள 95 சதவீத விளையாட்டு அரங்கங்களிலும், தற்காலிக மைதானங்கள் அமைத்தும் போட்டிகளை நடத்த பிரான்ஸ் ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய கட்டுமானங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடரை முன்னிட்டு இன்று பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. பாரீசில் திறந்தவெளி அரங்கில் ஒலிம்பிக் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரிஸின் சென்’ நதிக்கரையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் கப்பல்கள் மற்றும் படகுகளில் அணிவகுக்கின்றன.ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக, திறந்தவெளியில் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.எனவே பாரிஸில் வான் பரப்பில் 150 கி.மீ பரப்பளவுக்கு விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவை பொருத்தவரை இந்த ஒலிம்பிக் திருவிழாவில், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி உள்ளிட்ட 16 விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் மாற்று வீரர்கள் உள்பட மொத்தம் 117 பேர் கொண்ட இந்திய அணி பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கிறது.

கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் மொத்தம் 121 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.இந்திய அணி 7 பதக்கங்களை வென்று இருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தை எட்டும் என இந்திய மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை மன்னன் நீரஜ் சோப்ரா மீண்டும் பதக்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்பிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் பிரேக்கிங் என்ற போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நடனம் மற்றும் சாகச அசைவுகளை உள்ளடக்கியது. இந்த போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

மொத்தத்தில் உலகமே கொண்டாடும் ஒலிம்பிக் திருவிழாவில் நம் நாட்டு வீரர்கள் எத்தனை பதங்கங்கள் வெல்வார்கள் என்ற ஆர்வம் அனைவரிடமும் ஏற்பட்டு இருக்கிறது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?