நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் பங்கீடு செய்து முடித்து விட்டது. பாஜக ஒருபுறம் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் போக, எஞ்சியுள்ள 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, கனிமொழி தலைமையிலான தயாரிப்புக் குழு முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. அதனைப் பெற்றுக் கொண்ட அவர், இது திமுக திமுக தேர்தல் அறிக்கை அல்ல, தமிழ்நாட்டுக்கான தேர்தல் அறிக்கை என்று கூறினார்.
சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள நீட் தேர்வு விலக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ;-
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படும்
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்
அனைத்து மாநில மொழி வளர்ச்சிக்கும் சம அளவில் நிதி ஒதுக்கீடு
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.10 லட்சம் கடனுதவி
சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும்
வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லையேல் அபராதம் வசூலிக்கும் திட்டம் கைவிடப்படும்,
சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 ரூபாயாக குறைக்கப்படும்
ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை அளிக்கப்படும்
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்
நாடு முழுவதும் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்க நடவடிக்கை
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தமிழர்களுக்கு குடியுரிமை
புதிய கல்விக்கொள்கை மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்
திமுக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்
பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.10 லட்சம் கடனுதவி
சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும், உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
This website uses cookies.