நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமைத்த கட்சிகளுடனேயே, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறது. தற்போது, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது.
அதேவேளையில், கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக இந்த முறை தனித்தனியே கூட்டணி அமைத்து களம் காண உள்ளன. அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் அமைப்பதற்காக, இரு கட்சிகளிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். ஆனால், ஏதும் பலனளிக்கவில்லை.
இதனால், அரசியல் கட்சிகளை தங்களின் கூட்டணிக்கு இழுப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அதிமுக, பாஜக மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடி ஏற்படாததால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், இதுவரை கூட்டணியில் யார் இடம் பெற போகிறார்கள் என்பதே தெரியாமல் இருந்து வருகிறது. அதேவேளையில், பாஜக கூட்டணியில் இதுவரை ஓபிஎஸ் அணி, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி மட்டுமே இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஆனால், பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், 2 தொகுதிகள் தரும் கட்சிகளுடனே கூட்டணி என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா நிபந்தனை விதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தமாகா கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
அண்மையில், தாமரை சின்னத்தில் தான் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறிய நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இவ்வாறு கூறியிருப்பது, பாஜக மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.