நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போகிறதா? தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்!!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2024, 11:41 am
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போகிறதா? தமிழக வரும் தலைமை தேர்தல் ஆணையர்!!
பிப்ரவரி 23-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தமிழ்நாடு வருகிறார். வருகின்ற பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணைய ராஜீவ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையில் நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்ட பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அரசியல் கட்சிகள் , காவல் உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிடோரிடம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடு பற்றி ஏற்கனவே தேர்தல் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு சென்ற நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வருகிறார்.