நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தாகும் திமுக… தனித்தனியே குழு அமைத்து அதிரடி ; உதயநிதிக்கும் முக்கிய பொறுப்பு!

Author: Babu Lakshmanan
19 January 2024, 1:05 pm
Quick Share

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த முறை மத்தியில் பாஜகவை வீழ்த்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று இண்டியா என்ற கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளன.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் எப்படியாவது எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதில் தமிழகத்தில் ஆளும் திமுக கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையில், தொகுதி பங்கீடு நடத்தவும், தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும், தேர்தலை ஒருங்கிணைக்கவும் தனித்தனியே குழு அமைத்து திமுக தலைமை அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில், திரு.கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்) திரு. இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு.க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு. ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக எம்பி கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் விவரம்:- டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.இராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க குழு அமைத்து திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு,தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
s

  • snehan recent news சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?
  • Views: - 313

    0

    0