“தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பொன் விழாவிற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் அழைப்பு விடுத்தால் பாஜகவில் இணைவோம்” என தூத்துக்குடி பாதிரியார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பொன் விழா வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. பொன் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பாதிரியார்கள் முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலினை பொன்விழா நிகழ்ச்சிக்கு அழைத்தால் பாஜகவில் இணைந்து விடுவோம் என்று பாதிரியார் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மதுக்கடைகளை மூடப்போவதாக தேர்தலின் போது ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் தனது வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. பொறுப்புள்ள முதல்வராக அவர் செயல்படாமல் பொறுப்பற்ற மது வியாபாரியாகவே செயல்படுகிறார். அதுபற்றி கேட்டால் பல்லிளிக்கிறார்.
புனித வெள்ளி அன்று பாஜக, நாம் தமிழர், மதுவிலக்கு சபை அவரிடம் கெஞ்சி கேட்டும் மதுக்கடைகளை மூட மறுத்துவிட்டார். அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளுக்கு உரிய உரிமைகளை படிப்படியாக மறுத்து வருகிறார். இப்படி பல வகைகளில் கிறிஸ்துவ சமூகத்தை ஓரம்கட்டி வருகிறார்.
இந்தநிலையில் தூத்துக்குடி மறைமாவட்ட பொன்விழாவிற்கு அவரை அழைக்க முடிவு செய்துள்ளார்கள். முதல்வர் ஸ்டாலினை அழைப்பதாக இருந்தால் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும், இல்லை என்றால் தாங்கள் ஒரு கட்சி சார்பாக செயல்படுகிறீர்கள் என்பது பொருளாகும். ஸ்டாலினை அழைத்து ஆன்மிக காரியத்தை படு கேவலமாக படுகுழிக்குள் தள்ளிவிட வேண்டாம்.
அப்படி தான் அழைப்பேன் என்று தாங்கள் இறுமாப்பு கொண்டால் கிறிஸ்துவ சமூகமும் தங்களுக்கு தலையாட்டி பொம்மையாக மாறிவிட்டால் அப்படிப்பட்ட கிறிஸ்துவனை நம்புவதை விட பாஜகவை நம்புவதே மேல் என்று முடிவு செய்து கொள்கை உறுதிபடைத்த நாங்கள் பொன் விழா நேரத்திலேயே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
This website uses cookies.