பிடிஆர் பதவி பறிப்பு? மௌனமாக இருப்பது ஏன்? பரபரப்பை கிளப்பிய ஹெச் ராஜா ட்வீட்!!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2023, 6:48 pm
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாரிடம் பேசியதான ஒரு ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டிருந்தார். அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிடிஆர் அந்த ஆடியோவில், உதயநிதி ஸ்டாலினும், முதல்வரின் மருமகன் சபரீசனும் சேர்ந்து ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர்.
அந்த பணத்தை அவர்கள் எப்படி கையாள போகிறார்கள்? மாட்டிக்கொள்ளாமல் அதை எப்படி பயன்படுத்த போகிறார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பணத்தை அவர்களது முன்னோர்கள் கூட சம்பாதிக்கவில்லை என்று கூறியது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை சவுக்கு சங்கர் வெளியிட பாஜகவின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து பகிர்ந்து வைரல் செய்து திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை என்று இதுவரை பிடிஆர் எந்த விளக்கமும் தரவில்லை. இது பாஜகவினருக்கு எரிச்சல் அடைய செய்துள்ளது. காரணம், ஆடியோ உண்மையோ அல்லது பொய்யோ.. இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டால் காலப்போக்கில் அதுவாகவே மறைந்துவிடும் ஆனால் அதுகுறித்து விளக்கம் அளித்தால் விஷயம் இன்னும் பெருசாகும் என்று பிடிஆர் நினைக்கலாம். இன்னொரு பக்கம் பிடிஆர் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது என்று விசிக எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜியின் மனைவி சர்மிளா வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே இந்த ஆடியோவை பகிர்ந்த சவுக்கு சங்கர் ” ஆடியோவில் பேசியிருப்பது அமைச்சர் பிடிஆர் தான் என்பதை உறுதி செய்த பிறகுதான் அதை வெளியிட்டேன் என்றும் என் மீது தவறு இருந்தால் அவர் தாராளமாக புகார் கொடுக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ” பிடிஆர் கூறியது உண்மை இல்லை என்றால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தூக்க வேண்டும்.. அப்படி தூக்கவில்லை என்றால் முதல்வருக்கு முதுகெலும்பு இல்லை என்றும் பிடிஆர் கூறியது உண்மை என்றும் எடுத்துக்கொள்ளலாம்” என கூறியுள்ளார் சவுக்கு சங்கர்.
இதற்கிடையே நேற்று ஒரு தகவல் தீயாக பரவியது. அது பிரபல செய்தி தாளிலும் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியை குறித்து ஊழல் குற்றசாட்டை வைத்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் பழனிவேல் தியாகராஜனை மந்திரி பதவியில் இருந்து நீக்கி புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசுவை நியமிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மை இல்லை என்றாலும் அவ்வாறு நடந்தால் சில அமைச்சர்களின் வாயில் சக்கரை கொட்டிய செய்தியாக இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரம்.
ஆனால், இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் விளக்கம் அளிக்காமல் இருப்பதே அரசுக்கும், அவரது பதவிக்கும் நல்லது என்றும் அதை அவர் உணர்ந்ததால்தான் இதுகுறித்து இன்னமும் விளக்கம் அளிக்காமல் இருப்பதாக அரசியல் பேசுபவர்கள் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, ல்டாலின் மகனும், மருமகனும் 30000 கோடி ஊழல் பணம் வைத்துள்ளது பிரச்சினையாக உள்ளது என்கிற உறுதி செய்யப் படாத PTR ஆடியோ வந்துள்ளதாக செய்தி உலா வரும் நேரத்தில் அவரது பதவி பறிக்கப் படுமானால் மக்கள் அச்செய்தி உறுதி என நம்புவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.