கேரள மக்கள் இந்த முறை BJPயை ஏமாற்ற மாட்டார்கள்…. எனக்கு நம்பிக்கை இருக்கு ; அண்ணாமலை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 5:12 pm

கேரள மக்கள் இந்த முறை BJPயை ஏமாற்ற மாட்டார்கள்…. எனக்கு நம்பிக்கை இருக்கு ; அண்ணாமலை பேச்சு!!

கேரளாவில் பா.ஜ.க, வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.

கொல்லத்தில் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை, நாட்டு மக்கள் பிரதமரை தேர்வு செய்யப் போகும் தேர்தல் இது. இந்திய மக்கள் தெளிவாக உள்ளனர்.

10 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியைப் பார்த்து உள்ளனர். அவர்கள் நிலைத்தன்மையை விரும்புகின்றனர். மோடி ஆட்சி தொடர விரும்புகின்றனர்.

‛இண்டியா’ கூட்டணி கட்சிகள் அதிகாரப் பசியால் ஒன்று கூடி உள்ளனர். அவர்கள் பேராசை கொண்டவர்களாக உள்ளனர். தங்களது குழந்தைகளை காப்பாற்ற விரும்புகின்றனர்.

இப்படிப்பட்டவர்களிடம் நாட்டின் அதிகாரத்தை எப்படி கொடுக்க முடியும். அவர்களால் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை. இந்த முறை கேரள மக்கள் மீது நம்பிக்கை உள்ளது.

கடந்த 3 தேர்தல்களில் பா.ஜ.க,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்க மக்கள் உதவியாக இருந்தனர். இந்த முறை இங்கிருந்து பா.ஜ.கவைச் சேர்ந்தவர் வெற்றி பெறும் அளவுக்கு கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உடன் இருக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!