தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல்… பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி… பிற்பகல் 1 மணியளவில் இறுதி ஊர்வலம்…!!

Author: Babu Lakshmanan
29 December 2023, 10:23 am

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது.

இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் அலைமோதியது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் இன்று கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, விஜயகாந்த்தின் உடல் இன்று மாலை 4.45 மணியளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, பிற்பகல் 1 மணிக்கு தீவுத்திடலில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி கோயம்பேடு வந்தடைய இருக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 370

    0

    0