தண்ணீர் இன்றி தவித்த மக்கள்… அதிகாரிகளுக்கு போன் போட்டு டோஸ் விட்டஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2023, 4:33 pm

தண்ணீர் இன்றி தவித்த மக்கள்… அதிகாரிகளுக்கு போன் போட்டு டோஸ் விட்டஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!!

நாளைக்கு தீபாவளி 15 நாளா தண்ணீர் வரல, இன்று மாலைக்குள் விராலிமலை மக்களுக்கு குடிநீர் வராவிட்டால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை விராலிமலை மீது எப்போதும் தனி கவனம் செலுத்தக்கூடியவர் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்த போதே ஆயிரம் பணிகள் இருந்தாலும் விராலிமலை மக்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஒதுக்கிவிடுவார்.

எளிமையா எல்லோரிடமும் பேசி பழகும் விஜயபாஸ்கர், தனது தொகுதியில் இருந்து யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாமல் சென்று விடுவார்.

இதனாலயே தொடர்ந்து 3வது முறையாக 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவரை வெற்றி பெற வைத்தனர்.

இந்த நிலையில் தான் 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை என விராலி மக்கள் புகார் கொடுத்ததையடுத்து, சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிக்கு போன் போட்ட விஜயபாஸ்கர், 15 நாளா தண்ணீர் வரல, என்ன விளையாடுறீங்களா? காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் தருகிறோம் என சட்டசபையில் மட்டும் அமைச்சர் பேனில் போதுமா? தண்ணீர் எங்கே என போனில் ஸ்பீக்கர் போட்டபடி பேசினார்.

இதையடுத்து விஜயபாஸ்கர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரி, ஒரு கட்டத்தில் அண்ணே தண்ணர் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம், கொடுத்திடலாம் அண்ணே என கூறி சரண்டர் ஆனார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!