அம்மா உணவகத்தை மூட நினைத்தால் மக்களே உங்களுக்கு பதிலடி கொடுப்பாங்க : திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2022, 9:48 pm

திமுக அரசு அம்மா உணவகத்தை மூட நினைத்தால் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, திமுக அரசு அம்மா உணவகத்தை மூட நினைத்தால், மக்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். கல்வியில் சிறக்கும் மாநிலம் தான் வளர்ச்சி அடையும்.

அதிக நிதி ஒதுக்கி எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செய்த புரட்சியால் தான் தமிழகம் கல்வித்துறையில் சிறந்து விளங்குகிறது. அதிமுக ஆட்சியில் 7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…