சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் : அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2024, 3:22 pm

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் ஆந்திரா கர்நாடகா பெங்களூர் ஓசூர் போன்ற மாநிலங்கள் மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி காஞ்சிபுரம் திருவள்ளூர் சேலம் வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்காக திருமழிசை துணைக்கோள் நகரத்தில் 350 கோடி மதிப்பீட்டில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கும் படி நடந்து வருகிறது இந்த பணிகளை அமைச்சர் சேகர் பாபு இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் மேலும் பணிகள் எப்போது முடியும் எந்த அளவுக்கு பணிகள் முடிந்துள்ளது என்பது குறித்து நீண்ட நேரம் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார் இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது

திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கின்ற அனைத்து கட்சியினருக்கும் எந்தவிதமான பொருளும், ஆயுதமும் கையில் கிடைக்கவில்லை கையில் கிடைக்கின்ற ஆயுதங்களை எல்லாம் இந்த ஆட்சியாளர்கள் மீது தூக்கி எரிய முற்படுகிறார்கள்

எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பாலும், தேனும் ஆராய் ஓடியதா.? அவரது தலைவர் என்று போற்றக்கூடிய கொடநாடு பங்களாவில் காவலரின் உயிரை கூட காப்பாற்ற முடியாத துப்புகெட்ட ஆட்சி நடத்தியவர் சட்டம், ஒழுங்கை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை காய்ந்த மரத்தின் மீது கல் விழும் அவர் தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து பேசி வருகிறார்.

அவரது உயரம் அவருக்கே தெரியவில்லை கண்ணாடி கூண்டிலிருந்து கல் எரிந்து கொண்டிருக்கிறார். திமுக கற்கோட்டை திரும்ப தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தாங்க மாட்டார்

சீமான் மீது பொதுநல விரும்பிகள் புகார் கொடுத்து வருகின்றனர். சட்டப்படி சாத்திய கூறுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
இதே பாட்டை பாடியதற்காக ஏற்கனவே சீமான் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளார்.

அதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்துகிறார் என்றால் அரசியல் பார்வை அவர் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தரையில் உருண்டு புரண்டாலும் சரி தரையில் தவழ்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்க முடியாது சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?
  • Close menu