ஊடக சுதந்திரத்தை பாழடிப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 9:39 pm

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படத்தை வெளியிட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக அந்த ஆவணம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது.

இந்தநிலையில் மும்பை, டெல்லியில் உள்ள பி.பி.சி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை பி.கே.சி. பகுதியில் உள்ள பி.பி.சி. அலுவலகத்தில் 4 பேர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பி.பி.சி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை.

ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?