TARGET வைத்து மது விற்றால் மக்கள் உயிரை காப்பாற்ற முடியாது : ஆளுநரை சந்தித்த பின் திமுக குறித்து பிரேமலதா காட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan28 ஜூன் 2024, 1:12 மணி
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவர்னரிடம் கொடுத்துள்ளோம்.சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை.
அதனால் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும். ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள்.
மதுபான ஆலைகளை மூட வேண்டும். கவர்னர் நாங்கள் கூறிய கருத்துகளை மிக கவனமாக கேட்டார். போதைப் பொருள் பழக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் வேதனை தெரிவித்தார். கவர்னர் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள். இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறினார்.
0
0