பெரியார் சிலை விவகாரம்… கனல் கண்ணன் பேசியதில் என்ன தப்பு இருக்கு… அண்ணாமலை ஆதரவு..!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 1:42 pm

சென்னை : பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த பிறகு, பாஜக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான திமுகவின் குறைகளை சுட்டிக் காட்டினால் மட்டுமே, தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியும் என்பதை உணர்ந்து, பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் எதிர்கட்சி நாங்கள்தான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார். மேலும், அடிக்கடி ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு சற்று டிரியலையும் ஏற்படுத்தி வருகிறார்.

இதனிடையே, இந்து முன்னணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நடந்த நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதில், சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது ;- இந்துவாக இருப்பது பெருமை தான். ஒரு காலத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு நாடு பிடித்தனர். ஆனால் இப்போது மதத்தை மாற்றி நாட்டை பிடிக்கின்றனர். ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தவுடன் அங்கு ஒரு சிலை இருக்கிறது. அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது.

நான் சொல்கிறேன் அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ..? அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என அவர் பேசினார். அவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இந்த நிலையில், இந்நிலையில் கனல் கண்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- திமுக அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். திமுக அரசு மத்திய அரசின் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும். பாஜக மத அரசியல் செய்யும் கட்சி கிடையாது. அரசு மேடையில் பேசிவிட்டு திமுகவினர் அதை கருத்துச் சுதந்திரம் என கூறினார்கள்.

அப்படி என்றால் கனல் கண்ணன் பேசியதும் கருத்துச்சுதந்திரம்தான். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் இருக்கும் இந்த சிலையை அகற்ற வேண்டும் என்று கருத்துக் கேட்டால் அனைவரும் அகற்றவேண்டும் என்று தான் கூறுவார்கள். தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள்தான் கோவிலுக்கு செல்வார்கள். தெய்வ நம்பிக்கை இல்லாத ஒரு பொது இடத்தில் அந்த சிலையை வைக்கட்டும், எனக் கூறினார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!