பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து கூறிய வழக்கில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.
சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.
இதையடுத்து, அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் தாக்கல் செய்த மனுவை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், விசாரணை அதிகாரி முன் 4 வாரங்கள் இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டதுடன்,
தேவையில்லாத கருத்துகளை பேசுவது பேசனாகி விட்டதாகவும், இனி இது போல பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கனல் கண்ணனுக்கு உயர்மன்றம் உத்தரவிட்டது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.