பெரியார் சிலை அகற்றியதற்கு அந்த பண்ணை வீடு காரணமா? திராவிடர் விடுதலை கழக பிரமுகர் பரபரப்பு புகார்.. (வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan29 January 2023, 11:56 am
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் இளங்கோவன். திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் திராவிடர் விடுதலை கழகத்தில் செயல்பட்டு வருகிறார்.
இவர் காரைக்குடியை அடுத்த கோட்டையூர் உதயம் நகரில் புதிதாக சொந்த வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையும் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பெரியார் சிலையின் திறப்பு விழா இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இந்த சிலையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சிலையை திறக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இளங்கோவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதனை அகற்ற சொன்னதற்கு இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள், பெரியார் சிலை மீது துணியை சுற்றி வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக பெரியாரியவாதிகள் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த அரசெழிலன் தெரிவித்தபோது, அரசு அனுமதிபெற்ற பட்டா நிலத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கிய 2 நீதிமன்ற தீர்ப்புகளை காட்டிய பிறகும் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதை அகற்றினர் என்று தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளரான இளங்கோவன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது, “தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையை என்னுடைய சொந்த பட்டா இடத்தில் மதில் சுவறுக்கு உள்ளே நான் வைத்தேன். காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் சேர்ந்த யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சிலையை அகற்றி உள்ளார்கள்.
காரைக்குடியில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் பண்ணை வீட்டிற்கும் எனது வீட்டிற்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தொலைவுதான் இருக்கும். நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக இருப்பதாக நாங்கள் காவல்துறையிடம் கூறினோம். சிலையை அகற்றக்கூடாது, அப்படி அகற்றினால் சட்ட விரோதம் என்று சொன்னோம். மீறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நான் படித்துக் காட்டியும் அவர்கள் ஏற்க மறுத்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று சொன்னபோது போங்க என்று கூறினார்.
இந்த சிலையை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்கிறார்கள். யார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம்போய் பேச சொன்னோம். காவல்துறையில் காவிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தம்பி இங்க வா @rajiv_dmk pic.twitter.com/lXQfmssP1F
— Savukku Shankar (@Veera284) January 29, 2023
ஆனால், எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள், பெரியார் சிலை மீது துணியை சுற்றி வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக பெரியாரியவாதிகள் முழக்கங்களை எழுப்பினர்.
0
0