பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டிற்கு வந்த தொலைபேசி மிரட்டல் : ஷாக் ஆன குடும்பத்தினர்… போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan15 August 2022, 4:26 pm
தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறது. முகேஷ் அம்பானிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்க் சொந்தமான மருத்துவமனைக்கு இன்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் தன்னை பயங்கரவாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அடுத்தடுத்து 4 முறை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து, டிபி மார்க் போலீஸ் ஸ்டேஷனில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.