பன்றி முகம் கொண்ட பெரியார் போட்டோ.. AI மூலம் எடிட் : பிரபல அரசியல் கட்சி கடும் விமர்சனம்!!!
தமிழ்நாட்டில், சாதி பெயரை சொல்வதற்கே மக்கள் தயங்கும் நிலையை உருவாக்கியவர் தந்தை பெரியார்.
சமூக நீதி, சுயமரியாதை, திராவிட சித்தாந்தங்களை பிடிக்காத சிலர் அவரது சிலையை உடைப்பது, சாயம் பூசுவது என தொடர்ந்து இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் நவீன வடிவமாக பெரியாரின் உருவத்துடன் பன்றி முகத்தை இணைத்து ஒரு புகைப்பத்தை வடிவமைத்து உள்ளனர் விஷமிகள்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த படத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் இந்த புகைப்படத்தை வெளியிட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரும் இல்லை. விமர்சனங்களை ஏற்காதவரும் இல்லை. அவர் குறை இல்லாத மனிதரும் இல்லை. தான் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்கும்படி அவர் ஒருபோதும் சொன்னவரும் இல்லை.
பெரியாரிடம் குறைகளும் உண்டு. நிறைகளும் உண்டு. ஆனால் அவர் தனக்காக எதையும் கூறவில்லை. தான் உயரவேண்டும், சம்பாதிக்கவேண்டும், பதவிக்கு வரவேண்டும் என்று எப்போதும் சிந்திக்காதவர்.
அதற்காக மெனக்கெடாதவர் என்பதுமட்டும் உறுதியாக சொல்லமுடியும். அவரின் வாழ்நாள் முழுவதும் விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதை குறித்து சிந்தித்தவர் செயல்பட்டவர். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக களமாடியவர். மதத்தின் பெயரால், மனு தர்மத்தின் பெயரால், சனாதனத்தின் பெயரால் நடைபெறும் சண்டாளத்தனங்களை சாடி சாட்டையை சுழற்றியதோடு சம தர்மம், சமத்துவம் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய சமரசமிற்றி போராடிய ஒரு புரட்சியாளர். யாரையும் எதனைக் கொண்டும் ஏமாற்றுவதை தடுத்ததால் அவரை சிலருக்கு பிடிக்காது. பலருக்கு பிடித்தது.
அவர் ஏற்படுத்திய விழிப்பணர்வுதான் இன்றும் ஆதிக்க வர்கத்தின் அடிவயிற்றில் புளியை கரைக்கிறது மற்றபடி அவர் மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட மடமைதனை சாடினார். மனிதத்தை நேசிக்கச் சொன்னார்.
அன்று அவர் ஏற்படுத்திய தாக்கம் இப்போது தமிழகத்தையும் தாண்டி பரவுகிறது அதுதான் சங்கிகளை கதிகளங்க வைக்கிறது. அதனால் அவரை பல வகையில் வன்மத்துடன் பலவற்றை கக்குகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த படம். இதனாலெல்லாம் பெரியாரை இழிவுபடுத்திவிட முடியாது. அவர் பக்திமான்களிடமும் வாழ்கிறார். அவர் விதைத்த விதைகள் இன்று விரிச்சகமாய் வியாபித்து நிற்கிறது. அவரின் தத்துவங்கள் யாவும் பக்தனையும் பக்குவப்படுத்தி உள்ளது. சங்கிகளே உங்கள் வன்மம் எல்லாம் ஒரு வெங்காயமும் செய்யாது பெரியார் வாழ்கிறார், வாழுவார்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.