தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் 65 அடி உயர கொடி கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் புலி கொடியை ஏற்றி வைத்த கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளரிடம் பேசும் போது டாஸ்மாக்கில் குடித்தது அவர்கள் மது அல்ல சைனட் என மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார்.
டாஸ்மார்க் மதுபானம் சாமானிய மனிதர்களால் குடிக்க முடியாததால் தான் குறைந்த விலைக்கு கிடைக்க கூடிய கல்லை தேடியும் செல்கிறார்கள். பாண்டிச்சேரி உட்பட அனைத்து மாநில அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா ஆந்திரா பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கள் இருக்கும் போது ஏன் தமிழகத்தில் மட்டும் திறக்கக் கூடாது.
ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் இதுவரை வாய் திறக்கவில்லை. செங்கோல் கொடுத்தது என்பது ஒரு ஏமாற்று வேலை ஏற்கனவே செங்கோல் கொடுக்கப்பட்டது. இதனால் தமிழர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.
தமிழர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து இதுபோன்ற இவர் தமிழ் மொழி என்று கூறுகிறார்கள். செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை ஏன் உள்ளே வைக்காமல் போல் வெளியே நிறுத்தி உள்ளீர்கள்.
ராஜராஜ சோழன் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினான் ஆனால் தற்பொழுது குடியாட்சியில் முடியாட்சி நடக்கிறது. அதுவும் கொடுங்கோல் ஆட்சியாக நடக்கிறது.
செங்கோலை கொடுக்கும்போது ஆதீனங்கள் தேவாரம் பாடும் போது ஏன் இன்னும் பெரிய கோவிலில் உள்ளே பாடவில்லை ஒரு வேலையாவது பாட சொல்லுங்கள்.
வருமான வரித்துறை சோதனையில் இரு தரப்பிலுமே தவறு உள்ளது வருமான வரித்துறை அதிகாரிகள் ஏன் பையை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறுகிறார்கள். அவர்கள் கையில் கையெழுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வருமான வரித்துறையினர் தங்களிடம் முன்கூட்டியே பாதுகாப்பு கேட்கவில்லை எனக் கூறுகிறார் எந்த ஒரு சோதனைக்கு செல்லும் போதும் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் செல்ல மாட்டார்கள் திடீரென்று தான் வருவார்கள் தகவல் கொடுத்துவிட்டு வந்தால் அவர்கள் அங்கு தகவல் கொடுத்து விடுவார்கள்.
செந்தில் பாலாஜி கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால் வருமானவரித்துறை சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூற வேண்டியது தானே.
அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய ரசிகர்கள் இதுபோல் முற்றுகை செய்திருந்தால் எப்படி சோதனை செய்திருக்க முடியும்.
இதேபோல் எத்தனையோ அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது அனைவருமே பண பலம் படைத்தவர்கள் இது போல் யாரும் செய்தது கிடையாது. அதிகாரமும் அதிகாரமும் மோதுகிறது பேய்க்கும் பேய்க்கும் சண்டை போல நம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.