அடகு வைத்த 25 கிலோ நகைகளை எடுத்துக் கொண்டு மாயமான மேலாளர்: பொதுத்துறை வங்கியில் போலி நகைகள்: 17 கோடி அவ்ளோதானா….!!
Author: Sudha17 August 2024, 9:34 am
கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் மேலாளராக திருச்சியைச் சேர்ந்த மது ஜெயக்குமார் பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஜூன் மாதம் கொச்சியில் உள்ள கிளை வங்கி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதிய மேலாளராக, பனூரை சேர்ந்த இர்ஷாத் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.
அவர் பணியில் இணைந்த உடன், அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகை அனைத்தையும் ஆய்வு செய்தார். அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.மொத்தமும் போலி நகை என்பதை அறிந்தார்.
பணி மாறுதல் செய்யப்பட்ட மது ஜெயக்குமார், ஒரிஜினல் நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து, மொத்த நகையையும் எடுத்துச் சென்றது புரிந்தது. புதிய பணியிடத்தில் அவர் வேலையில் சேரவும் இல்லை என்பதால், அவர் நகையை திட்டமிட்டு திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பழைய மேலாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தங்க ஆபரணங்களை வங்கியில் கணக்கு வைத்துள்ள 42 பேர் அடகு வைத்துள்ளனர். நகை மாயமானதால், வங்கிக்கு 17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாயமான முன்னாள் மேலாளர் மது ஜெயக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.