+1 பொதுத்தேர்வில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி… கெத்து காட்டும் பெரம்பலூர்.. எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் சென்டம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
27 June 2022, 11:27 am

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்தப் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99 % மாணவர்கள் 84.6 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.44% 2வது இடத்தில் விருதுநகரும், 95.25% உடன் மதுரை 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

+1 ரிசல்ட் : பாடவாரியாக 100% பெற்ற மாணவர்கள்

கணினி பயன்பாடுகள் – 2,186
கணக்குப்பதிவியல் – 2,163
கணினி அறிவியல் – 873
வணிகவியல் – 821
கணிதம் – 815
இயற்பியல் – 714
பொருளியல் – 637
உயிரியல் – 383
வணிகக் கணிதம், புள்ளியியல் – 291
வேதியியல் – 138
விலங்கியல் – 16
தாவரவியல் – 3

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 727

    0

    0