பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு… ரிசல்ட் தேதி மாற்றம் ; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 2:06 pm

சென்னை ; பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 13ம் தேதி முதல் 3ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்தன. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, விடைத்தாள்கள் திருத்தும் பணிளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும், முதமைச்சரிடம் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும், மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!