+2 பொதுத்தேர்வில் தோல்வி… மாணவி உள்பட இருவர் தூக்குபோட்டு தற்கொலை : விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என வேண்டுகோள்..!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 6:24 pm

விழுப்புரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மற்றும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் 12ஆம் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்த மாணவன் ஜோமன் ராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக வளவனூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வடவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் இவரது மகள் சத்தியவதி தேவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று தேர்வு எழுதிய நிலையில், இன்று தேர்வு முடிவு வெளியானது.

இதில், சத்தியாவதி இயற்பயியல், வேதியியல் மற்றும் விலங்கியலில் பாடத்தில் தோல்வி அடைந்ததால், பள்ளி மாணவி மனம் உடைந்து சோகமாக காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு பரிதாபமாக இறந்துள்ளார்.

மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவலறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இது குறித்து வளத்தி போலிசார் விசரானை மேற்கொண்டு வருகின்றனர். சத்தியவதியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்தந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…