கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3ம் தேதி காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் மாணவன் ஜீவாவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சென்ற போலீசார் ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தலைமறைவாக உள்ள ஆனந்தை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை தாம்பரத்தில் மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த குற்றவாளி ஆனந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், ஓரினச்சேர்க்கை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…
டிரெண்டிங் நடிகை நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் நேற்று முழுவதும் குஷ்பு இணையத்தில்…
ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…
தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
This website uses cookies.