மீண்டும் பிரதமர் மோடியா? நிருபர்கள் கேட்ட கேள்வி : ரஜினி சொன்ன பதில்.. கட்சியினர் உற்சாகம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2024, 12:55 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தவுடன் 10 நாள் ஓய்விற்காக அபுதாபி சென்றிருந்தார்.

பின்னர், ஓய்வை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு செல்வதற்காக போயஸ் கார்டனில் இருந்து விமான நிலையம் புறப்பட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன், இந்த வருடமும் அங்கு செல்வது மகிழ்ச்சி. அங்கு பத்ரிநாத், கேதார்நாத் செல்ல உள்ளேன்” என்றார்.

அப்பொழுது அவரிடம் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வருவாரா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு ரஜினி “வேணாம் அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்” என தெரிவித்தார்.

மேலும், இசையா? பாடலா? என்ற கேள்விக்கு செய்தியாளரை “அண்ணா… NO Comments” என்று கூறிவிட்டு சென்றார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!